Yesu Azhaikiraar

👤 LightHouse Records

🎹 Key: C

🌐 Language: Tamil

🙏 Context: Comfort & Strength

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார்

சரணங்கள்
1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே — இயேசு

©2026 Exalt Him Ministries 

Log in with your credentials

Forgot your details?